விடைத்தாள் திருத்தப் பணி எதிர்வரும் 15ஆம் திகதி முதல்

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
39 பாடசாலைகளில் 428 விடைத்தாள் திருத்த நிலையங்களில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பணிகளில் 6 ஆயிரத்து 848 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதிவரை முன்னெடுக்கப்பட உள்ளது.
572 விடைத்தாள் திருத்தும் நிலையங்களில் 8 ஆயிரத்து 432 ஆசிரியர்கள் இந்த விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் 37 பாடசாலைகள் மூடப்பட உள்ளதுடன், அந்த பாடசாலைகள், மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]