விடுமுறைக்கு பின்னர் சீருடை வவுச்சர்

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கான சீருடையை வழங்குவதற்கான வவுச்சர் ஓகஸ்ட் மாத விடுமுறைக்கு பின்னர் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்குத் தேவையான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தற்போது, பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.

43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கும், பிரிவெனாக்களில் கல்வி பயில்வோருக்கும் தேவையான சீருடை துணிகளை வவுச்சர் மூலம் கொள்வனவு செய்ய முடியும்.

கடந்த முறையைப் போன்று இம்முறையும் இந்த வவுச்சர் நடைமுறை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதற்குத் தேவையான நிதி அரசாங்கத்தினால் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]