விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதிசேகரித்தவர்களுக்கு நெதர்லாந்தில் தண்டனை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் நெதர்லாந்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் நான்கு சந்தேக நபர்களுக்கான தண்டனையை நெதர்லாந்து உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது.

குற்றவியல் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்ற வகையில், ஐந்து பேருக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு ஆறு மாதங்கள் தொடக்கம் 19 ஆண்டுகள் 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

2003தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்காக நெதர்லாந்தில் நிதி சேகரித்தார்கள் என்று இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. சட்டவிரோத சீட்டிழுப்புகளை நடத்தினார்கள் இவற்றின் மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தை இலங்கைக்கு அனுப்பினார்கள் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

தண்டனை விதிக்கப்பட்ட ஐவரில் நால்வர் தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக நெதர்லாந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டை நிராகரித்துள்ள நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் நால்வருக்குமான தண்டனையை உறுதி செய்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]