விடுதலைப்புலிகள் குற்றச் செயல்களில் ஈடுபடாத அமைப்பு – சுவிஸ் நீதிமன்றம்

விடுதலைப்புலிகள்

விடுதலைப்புலிகள் குற்றச் செயல்களில் ஈடுபடாத அமைப்பு – சுவிஸ் நீதிமன்றம்

சுவிற்சர்லாந்தின் சமஸ்டி குற்றவியல் நீதிமன்றமானது விடுதலைப்புலிகள் இயக்கத்தை குற்றச்செயல்களிலோ அல்லது வேறெந்த தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பு என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

அண்மையில், சுவிஸ்ஸில் 13 பேர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 13 பேருக்கும் சிறைத்தண்டனை வழங்க சுவிட்சர்லாந்தின் சமஸ்டி குற்றவியல் நீதிமன்றம் மறுத்துள்ளது.

குறிப்பிட்ட 13 பேரும் குற்றங்களில் ஈடுபட்ட அமைப்பொன்றிற்கு ஆதரவு வழங்கியதுடன் அதன் நடவடிக்கைகளில் பங்கெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட 13 பேரில் 8 பேர் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். மீதம்முள்ள 5 பேரையும் மோசடிகளில் ஈடுபட்டதாக ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]