விஜேதாஸ ராஜபக்க்ஷவுக்கு ஆதரவாக களமிறங்கும் சுதந்திரக் கட்சி

நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்க்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரரேரணை கொண்டுவருவது அல்லது அவரின் அமைச்சுப் பதவியை பறிக்க ஐக்கிய தேசியக் கட்சியால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது என்று அறிவித்துள்ளது.

தேசிய அரசில் ஐ.தே.கவின் பங்காளிக் கட்சியாகவுள்ள சு.க.,  ஐ.தே.கவுடன் கலந்துரையாடாமல் பல்வேறு முடிவுகளை தன்னிச்சையாக எடுத்து வருவதால் ஐ.தே.கவின் அமைச்சர்களும், எம்.பிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். தேசிய அரசில் தொடர்ந்து செயற்பட முடியாது ஐ.தே.க தனித்து ஆட்சியமைக்க வேண்டும் பிரதமருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும்,

பிரதமரும் சு.கவின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள நிலையில், ஜனாதிபதியை சந்தித்து சு.கவினர் தொடர்ந்து எவ்வாறு தன்னிச்சையாக செயற்படும் பட்சத்தில் ஜனவரியில் ஐ.தே.க தனித்து ஆட்சியமைக்கும் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிவிவகார அமைச்சராகவிருந்த ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான பொது எதிரணியால் கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தேசிய அரசில் அங்கம் வகிக்கும் சு.கவினர் ஆதரவளிக்க தயாராகுவதாக தகவல்கள் வெளியாகியிருந்ததால் ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜனாமா செய்திருந்தார்.
தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தால் முன்னாள் அரசின் ஊழல்மோசடி விசாரணைகள் மூடிமறைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ள ஐ.தே.க,  நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் தலையீடுகள் காரணமாகவே குறித்த விசாரணைகள் தாமதப்படுத்தப்படுவதால் அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க பரிசீலித்துவரும் சூழலில் குறித்த நடவடிக்கைக்கு சு.க ஒருபோதும் ஆதரவளிக்காது என்று தெரிவித்துள்ளமை ஐ.தே.கவை மேலும் அதிருப்தியடையவைத்துள்ளது.

தேசிய அரசியல் தொடர்ந்து செயற்பட முடியாது என்று சு.கவின் சில அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களால் அண்மையில் கடும் அழுத்தம் கொடுப்பப்பட்டிருந்ததுடன், உடனடியாக சு.க தேசிய அரசில் இருந்த வெளியேற வேண்டும் என்றும் கூறியிருந்தனர். என்றாலும், எதிர்வரும் டிசம்பர்மாதம் வரை பொருமைக்காக்குமாறு அவர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், சு.கவின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள ஐ.தே.கவின் தேசிய அரசில் இருந்து வெளியேற வேண்டும் என்று பிரதமருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக அறிய முடிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]