விஜேதாஸவை பதவியிலிருந்து உடன் நீக்குமாறு ஜனாதிபதிக்கு ஐ.தே.க. பணிப்பு

நீதி அமைச்சர் விஜேதாஸவை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷீம் இன்று அன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

ஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டத்திலும், ஐ.தே.கவின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலும் அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஏகமானதாக நீதி அமைச்சர் விஜேதாஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை உடனடியாக அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விஜேதாஸவை பதவியிலிருந்து

விஜேதாஸ ராஜபக்ஷவை நீதி அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குவதுடன், புத்தசாசன அமைச்சையும் பறிக்க ஐ.தே.க. தீர்மானித்துள்ளது. அத்துடன், கூட்டு அரசின் பொறுப்பையும் இரகசியத்தையும் அவர் பேண மறுத்துள்ளதால் மீண்டும் எந்தவொரு அமைச்சுப் பதவியும் அவருக்கு வழங்கப் போவதில்லை என்ற தீர்மானத்தையும் ஐ.தே.க. எடுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]