விஜித ஹேரத் அரசாங்கம் வாக்குறுதியை  மீறிவிட்டது

எரிபொருள் மீதான வரியை நீக்குவதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம், பெற்றோல் லீட்டர் ஒன்றுக்கு தற்போது 60 ரூபாய் 19 சதம் வரி விதித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் விஜித ஹேரத், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆட்சியில் உள்ள அரசாங்கம் திறமையற்றது எனவும், பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டம் அடைவதாக காட்டிக்கொண்டு எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையை உடனடியாக குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]