விஜய்63 படத்தின் லேட்டஸ்ட் நியூஸ்- என்ன தெரியுமா??

தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யை இயக்கி வருகிறார் அட்லீ. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தற்போது ‘தளபதி 63’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்போது இந்த படத்தில் ஷாருக்கான் நடிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.ஷாருக்கான் ஒரு சிறப்பு தோற்றத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக வருகிறார் என ஒரு செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த படத்தில் விஜய் புட்பால் கோச்சாக வருகிறார்,அதேபோல் ஷாருக்கான் “சக் தே இந்தியா” படத்தில் ஹாக்கி கோச்சாக நடித்திருப்பார்.இந்த காரணத்திற்காக தான் என்னவோ விஜய் ரசிகர்கள் இருவரையும் இந்த படத்தில் ஒன்றாக பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டுள்ளனர்.விஜய் ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா என்று பார்ப்போம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]