அஜித்தான் ரியல் சர்வைவா கஸ்தூரி கருத்தால் வெகுண்டெழுந்த விஜய் ரசிகர்கள்

‘’அப்பாவால் முன்னேறியவர் விஜய் …’’ – அஜித்துக்கு ஐஸ் வைக்க விஜய்யை மட்டம் தட்டிய கஸ்தூரி புதிய சிக்கலில் சிக்கியுள்ளார்.kasturi vivegham tweet

ஏற்கனவே ரஜினியை ஒரு முறை கலாய்த்து, இன்னொரு முறை கழுவி ஊற்றினார். நேற்று ‘’விவேகம் படத்தைப் பற்றிக் கேட்டு என் வாயைக் கிளறாதீர்கள்’’ என்று ஸ்டேட்டஸ் போட்டு அஜித் ரசிகர்களிடம் கண்டபடித் திட்டு வாங்கினார்..

அஜித் ரசிகர்களுக்கு ஐஸ் வைப்பதாக நினைத்துக் கொண்டு விஜய் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டியுள்ளார். டிவிட்டரில் அவரிடம் ஒரு ரசிகர் ‘’விஜய், அஜித், சூர்யா மூவரில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்…?’’ என்று கேட்க, அதற்கு கஸ்தூரி ‘’விஜய், சூர்யா இருவரும் அவர்களின் அப்பாக்களால்தான் உயர்ந்தார்கள். ஆனால் அஜித் எந்த பின்புலமும் இல்லாமல் தனியாக உயர்ந்துள்ளார். அஜித்தான் ரியல் சர்வைவா’’ என்று பதில் கூறினார்.

இதனால் வெகுண்டெழுந்த விஜய் ரசிகர்கள் கஸ்தூரியை அர்ச்சனை செய்துகொண்டிருக்கிறார்கள்.