விஜய் 63 படத்தின் ஹீரோயின் இவர்தானாம்? புதிய அப்டேட்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் சீடரான அட்லி, ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘தளபதி’ விஜய்யை வைத்து ‘தெறி’ எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்தார் அட்லி.

மேலும், அட்லி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்ஷன்’ மூலம் ஜீவாவின் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை தயாரிக்கவும் செய்தார். கடந்த ஆண்டு (2017) மீண்டும் விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்திற்காக கூட்டணி அமைத்தார் அட்லி. இந்த படத்தில் விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்திருந்தார். விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ரிலீஸான இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

மெர்சலை அடுத்து அட்லி இயக்கும் புதிய படத்திலும் ஹீரோவாக ‘தளபதி’ விஜய்யே நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் 63-வது படமான இதில் ஹீரோயினாக நடிக்க ‘எம்.எஸ்.தோனி’ பட புகழ் கியாரா அத்வானியிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் கசிந்துள்ளது. தற்போது, விஜய் ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்தில் பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]