‘விஜய் 62’ படத்தின் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில்

விஜய் 62 போட்டோ – இளமையான விஜய்யின் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்!

சென்னை : விஜய்யின் 62-வது திரைப்படம் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிறது. இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது. ‘கத்தி’ படத்தைப் போல இப்போதும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதையைத்தான் படமாக்குகிறார் முருகதாஸ். ‘விஜய் 62’ படத்தில் விஜய்யின் நியூ லுக் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

விஜய்யை வைத்து ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யின் 62-வது படத்தை தற்போது இயக்கி வருகிறார். துப்பாக்கி படத்தில் ராணுவ வீரரைப்பற்றிய கதையை படமாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், கத்தியில் விவசாயிகள் பிரச்னையை படமாக்கினார். ‘விஜய் 62’ படத்திலும் விவசாயிகள் பிரச்னை பேசப்படுகிறதாம்.

‘விஜய் 62’ படத்தின்பு கைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. இந்தப் புகைப்படத்தில் விஜய் இன்னும் இளமையான தோற்றத்தில் இருக்கிறார். இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]