விஜய்யுடன் மெர்சல் பார்த்த உலக நாயகன்

பல்வேறு சர்ச்சைக்குள்ளான மெர்சல் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன், விஜய், அட்லி உள்ளிட்ட `மெர்சல்’ படக்குழுவுடன் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

KamalHaasan

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்கள் மற்றும் காட்சிகள் இந்தியா முழுவதும் அனைவராலும் பேசப்படும் ஒன்றாக அமைந்தது.

மெர்சல் திரைப்படத்தில் மத்திய மாநில அரசுகளை தாக்கும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை கிளம்பியது.

மெர்சல் தளபதி ரசிகர்களுக்கு

இதன்போது மெர்சல் படத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், நடிகர் கமல்ஹாசனும் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் மெர்சல் திரைப்பட குழுவுடன் இணைந்து திரைப்படம் பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]