விஜய் மல்லையா 3ஆவது முறை திருமணம் செய்ய திட்டம்

கடன் நெருக்கடியால் நாட்டை விட்டே ஓடிய கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா, 3ஆவது முறையாகத் திருமணம் செய்யத் திட்டமிட்டு வருவதாகச் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

62 வயதாகும் விஜய் மல்லையாவிற்கு 2 திருமணத்தின் மூலம் 3 பிள்ளைகள் இருக்கிறார்கள், இதுமட்டும் அல்லாமல் கடன் தொகையைத் திரும்பப் பெறுவதற்காக விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து விசாரணை செய்யத் திட்டமிட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது தோழியை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

விஜய் மல்லையா தற்போது தனது முன்னாள் 2 மனைவிகளை விடுத்து தனது நீண்ட நாள் கேள்பிரென்டான பிங்கி லால்வாணி உடன் வாழ்ந்து வருகிறார்.

இவர் தனது வாழ்வின் உயர், சரிவு என அனைத்துக் கடினமான இடத்திலும் பிங்கி இருக்கிறார், இதனால் இவரைத் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.