விஜய் மல்லையாவின் வீட்டை 73 கோடிக்கு வாங்கிய நடிகர்

விஜய் மல்லையாவின் வீட்டை 73 கோடிக்கு நடிகர் சச்சின் ஜோஷி ஏலத்தில் வாங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி கட்டாமல் லண்டனுக்குத் தப்பி சென்று வசித்து வருகிறார் விஜய் மல்லையா. அதனால் இந்தியாவில் அவருக்கு உள்ள சொத்துக்களை வங்கிகள் ஏலம் விட்டு பணத்தை திரும்ப பெற முயற்சி செய்து வருகின்றன.

கோவாவில் உள்ள அவரது சொகுசு வில்லா தற்போது நடிகர் சச்சின் ஜோஷி 73 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

JMJ group of industries உரிமையாளர் ஜெகதீஷ் ஜோஷியின் மகன் தான் இந்த சச்சின் ஜோஷி. பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ள இவர் தற்போது யார் இவன் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வில்லா இதற்குமுன் ஏலம் வந்தபோது 86 கோடிக்கு விலை நிர்ணயிக்கபட்டது. ஆனால், அதை வாங்க யாரும் முன்வரவில்லை. தற்போது அதை நேரடியாக விலை பேசி வாங்கியுள்ளார் சச்சின் ஜோஷி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]