விஜய் மற்றும் முருகதாஸ் ஆகியோருக்கு பொது சுகாதாரத்துறை நோட்டீஸ்- ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில்

சமீபத்தில் வெளியான சர்கார் பட போஸ்டரில் உள்ள புகைப்‌பிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 21 ஆம் தேதி வெளியானது வெளியான சர்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போல் இருந்ததால் அதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன. சில கட்சிகளும் அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என கடுமையாக எதிர்த்தன.

இந்நிலையில் புகை பிடித்தபடி உள்ள விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும், சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்று நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு பொதுசுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உடனடியாக நீக்காவிட்டால் சட்டப்‌பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புகைப்பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு திரைத்துறையை சார்ந்தவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

சமூக வளைத்தளங்களில் மூளை முடுக்கெல்லாம் பரவி கிடக்கும் சர்கார் பட போஸ்டரை நீக்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. படக்குழு இதனை எப்படி சமாளிக்க போகிறது என்று பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும். இந்த விவகாரம் விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]