விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பெயர் என்ன தெரியுமா? முழுவிபரம் உள்ளே!!

படத்துக்கு படம் இடைவேளை விடாமல் அடுத்தடுத்து கமிட்டாகி பிஸியாக நடித்து வருபவர் விஜய். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

படமும் முதலில் சொன்னபடி இந்த தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் அடுத்த படம் குறித்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துவிட்டன. தற்போது என்னவென்றால், இயக்குனர் அமீர்விஜய்யை சந்தித்து கண்ணபிரான் என்ற பெயரில் ஒரு கதை கூறியிருக்கிறாராம்.

விரைவில் இவர்களது கூட்டணி அமையும் என்கின்றனர். அமீர், கண்ணபிரான் என்ற படத்திற்கு விஜய்யை தவிர வேறு யாரையும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

அமீர் தற்போது தனுஷின் வட சென்னை படத்திலும் பேரன்பு கொண்ட பெரியோர்கள் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]