விஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கு படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

விஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கு படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

ஆயுத பூஜையை முன்னிட்டு திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் வடசென்னை.

இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் தைரியமான கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில், கிரந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் அறிமுகமாகும் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. விஜய் தேவரகொண்டாவுடன் எடுத்த செல்ஃபியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா, விஜய் தேவரகொண்டாவுடன் எனது முதல் தெலுங்கு படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் ராஷி கண்ணா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார்.

வழக்கமான கதாநாயகி கதாபாத்திரமாக அல்லாமல் நடிப்பதற்குச் சவாலான வித்தியாசமான கதாபாத்திரம் ஐஸ்வர்யாவுக்கு தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]