விஜய் தவற விட்ட வெற்றி படம் – 175 நாட்கள் ஓடி சாதனை! எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் பல வெற்றி படங்களை கொடுத்தாலும். சில நல்ல படங்களை தவற விட்டுள்ளார்.

இதில் ஒன்று தான் சேரனின் ஆட்டோகிராப். இந்த படம் 2004 ஆம் ஆண்டு வெளியாகியது.

இந்த படம் கடும் போட்டிகளுக்கு நடுவே நல்ல திரையரங்குகள்  இல்லாமல் கிடைத்த இடங்களில் மட்டுமே வெளியிட வேண்டிய சூழலில் படம் வெளியானது. படம் 175 நாட்கள் ஓடி பெரும் சாதனை படைத்தது.

இப்படத்தில் முதலில் விஜய் நடிப்பதாக தான் இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவர் நடிக்க முடியாமல் போக பின் சேரனே நடித்தார். படத்தின் வெற்றியை பார்த்து விஜய்யே சேரனை கூப்பிட்டு வாழ்த்தினாராம்.

தற்போது ஆட்டோகிராப் படத்தின் 15 ம் ஆண்டு கொண்டாட்டத்தை எட்டியுள்ளது. இதை அவர் மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]