அப்புறம் நாம நக்கிட்டுத்தான் போகணும் – விஜய் சேதுபதி

அறிமுக இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிக்கும் ‘கீ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

“நம்ம பிரச்னையை நாம் பேசித் தீர்த்துக்கணும். பொது இடங்களுக்குக் கொண்டுவந்து அடிச்சிக்கக் கூடாது. இப்போதெல்லாம் சினிமாக்காரன் என்றாலே ஒரு மாதிரி பார்க்கிறார்கள். தரம் தாழ்த்திப் பேசுகிறார்கள். மொத்தமாக சினிமாக்காரர்களை கை காட்டிப் பேசும்போது வருத்தமாக உள்ளது.

சினிமாகாரர்களை குறைவாக நினைப்பவர்கள் சினிமாவுக்கு வந்து ஒரு படம் எடுத்துப் பாருங்கள். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்களுக்குரிய பிரச்னைகள் உங்களுக்குத் தெரியும். ஒரு படம் எடுத்து முடிக்கும்போதும் உயிர் போய் உயிர் வருகிறது.

நாலு படங்கள் ஓடவில்லையென்றால் யாரும், யார் வீட்டுப் பக்கமும் வரவே மாட்டார்கள். நடிகனை சீண்ட மாட்டார்கள். அப்போது நடிகன் என்ன கத்திப் பேசினாலும் கண்டுகொள்ள ஆள் இருக்காது. வெற்றியடைந்தால், ஓடிக்கொண்டே இருந்தால்தான் இங்கு மதிப்பு.

பவர் வைத்துத்தான் இங்கு மரியாதை. அதுவும் போய்விட்டால், நாம் சோர்ந்துபோனால் அந்த இடத்திற்கு இன்னொருத்தன் வருவான். அப்புறம் நாம நக்கிட்டுத்தான் போகணும். நான் அனுபவத்தில், அறிவில் சின்னப் பையன். நான் தப்பா பேசியிருந்தா என்னை மன்னிச்சுக்கோங்க.” எனப் பேசினார் விஜய் சேதுபதி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]