விஜய் சேதுபதி நடிப்பில், பன்னீர் செல்வம் இயக்கத்தில், ஏ எம் ரத்னம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு (11 ஜனவரி) பூஜையுடன் தொடங்கியது

Vijay Sethupathi

தொடர் வெற்றி படங்கள், அதிகரித்து கொண்டே போகும் ரசிக பெரு மக்கள் என பல சிறப்பம்சங்களை ஒருங்கே பெற்று இருக்கும் விஜய் சேதுபதியும், ‘ரேணிகுண்டா’ புகழ் பன்னீர் செல்வமும் கைக் கோர்த்து இருக்கும் பெயரிடப்படாத திரைப்பட​​த்தின் படப்பிடிப்பு, (11.01.17) தேனியில் பூஜையுடன் தொடங்கியது. ‘ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ்’ சார்பில் ஏ எம் ரத்னம் தயாரிக்கும் இந்த அதிரடி படத்தின் பெரும்பாலான காட்சிகள் தேனி மாவட்டத்தில் படமாக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi

“முழுக்க முழுக்க கிராமத்து பிண்ணனியில் உருவாகும் கதையம்சத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. தற்போது நாங்கள் திண்டுக்கல் மாவட்டத்திலும், அதை சுற்றி இருக்கும் பகுதிகளிலும், சுமார் 70 நாட்களுக்கு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த இருக்கின்றோம். எங்கள் படத்தின் கதாநாயகிக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. மிக விரைவில் இந்த படத்தின் தலைப்பை, முதல் போஸ்டரோடு இணைத்து வெளியிட முடிவு செய்து இருக்கின்றோம்” என்று கூறுகிறார் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம்.