விரைவில் வெளியாகும் விஜய் சேதுபதி- திரிஷாவின் ’96’

விரைவில் வெளியாகும் விஜய் சேதுபதி- திரிஷாவின் ’96’

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் ’96’ என்ற படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.

இந்தபடத்தை ரோமியோ ஜூலியட், கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிக்கிறார்.

ஜனகராஜ், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள் ஆகியோரும் நடித்துள்ள இந்த படத்தை சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கோவிந்த் மேனன் இசையத்துள்ள இப்படத்தில், எடிட்டிங் கோவிந்தராஜ்,கலை வினோத் ராஜ்குமார், பாடல்கள் உமாதேவி – கார்த்திக் நேத்தா என பலர் இந்த படத்தில் கைகோர்த்துள்ளனர்.

எழுத்து மற்றும் இயக்கம் ஊ.பிரேம்குமார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தககது.

படத்தின் அனைத்துகட்ட பணிகளும் முடிந்து விட்டது. விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி புகைப்பட கலைஞராக நடித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இப்படத்தின் இயக்குனர் ஊ.பிரேம்குமார் கூறுகையில்,  முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையாக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களை விட இந்த படம் அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு அனுபவத்தை தரும். படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது எங்களுக்கு கிடைத்த வெற்றிதான் படமும் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ’96 படத்தை உலகம் முழுவதும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் S.S.லலித்குமார் வெளியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விரைவில் வெளியாகும்

விரைவில் வெளியாகும்

விரைவில் வெளியாகும்

விரைவில் வெளியாகும்

விரைவில் வெளியாகும்

விரைவில் வெளியாகும்

விரைவில் வெளியாகும்

விரைவில் வெளியாகும்

விரைவில் வெளியாகும்

விரைவில் வெளியாகும்

விரைவில் வெளியாகும்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]