விஜய் சேதுபதியுடன் களத்தில் இறங்கியுள்ள அர்ஜூன் ரெட்டி பட நாயகன்

விஜய் சேதுபதியுடன் களத்தில் இறங்கியுள்ள அர்ஜூன் ரெட்டி பட நாயகன்

எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதி விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான 96 மற்றும் நோடா ஆகிய படங்கள் மோதவுள்ளன.

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொன்டா இப்படத்தின் மூலம் தமிழில் காலடி எடுத்து வைக்கிறார்.

எனவே அவருக்கும் தமிழ் தற்போது ரசிகர்கள் உள்ள நிலையில், விஜய்சேதுபதியுடன் மோதவுள்ளார்.

விஜய் சேதுபதியுடன்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ’96’ படம் அக்டோபர் 4ஆம் திகதி ரீலிஸ் செய்யப்படவுள்ளது. இந்த படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தை ஒளிபதிவு செய்த சி பிரேம் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் திரிஷா, ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 கெட்-அப்களில் நடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதியுடன்

அந்தவகையில் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் இந்திய அரசியல் த்ரில்லர் படமாக வெளிவரவுள்ள திரைப்படம் நோடா. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி இசையமைத்துள்ளார்.

எனவே இந்த இரண்டு திரைப்படங்களும் எதிர்வரும் அக்டோபர் 05ஆம் திகதி களத்தில் குதிக்கவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]