காளி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மே 18ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள `காளி` படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.`வணக்கம் சென்னை` படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம்தான் `காளி`.

விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ருதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]