விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ நவம்பர் 30ஆம் தேதி ரிலீஸ்
ஒரு இயக்குனருக்கு வணிக ரீதியிலான முன்னணி நடிகர், சிறந்த நடிகர்கள் மற்றும் சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்கள், அதுவும் அவரது முதல் திரைப்படத்திலேயே அமைந்து விட்டால் அந்த படத்தின் கதையையும், இயக்குனரின் திறமையையும் அது பறை சாற்றும்.
விஜய் ஆண்டனி நடிக்க, ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் ‘அண்ணாதுரை’, வரும் நவம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
படம் வெளியாக இருப்பது எனக்கு உற்சாகமாகவும், அதே சமயத்தில் பதட்டமாகவும் இருக்கிறது. இந்த மாதிரி ஒரு கலவையான உணர்வுக்காக தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன். சினிமா கலையின் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
இந்த கதையை எனது முதல் படமாக இயக்கியதை நான் பெருமையாக நினைக்கிறேன். சினிமா கலையை கற்றுக் கொள்ள பல்வேறு இயக்குனர்களிடத்தில் வேலை செய்திருக்கிறேன், அவர்களுக்கு நன்றி. வசந்தபாலனிடம் கிளாஸாக எப்படி படம் எடுப்பது, சுசீந்திரனிடம் அழுத்தமான கமெர்சியல் படம் எடுப்பது எப்படி, நகைச்சுவையை பூபதி பாண்டியனிடமும், குறிப்பிட்ட நேரத்துக்குள் படம் எடுப்பதை எழில் சாரிடமும் கற்றுக் கொண்டேன். அண்ணாதுரை கதையை விஜய் ஆண்டனியை தவிர்த்து யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை.
பல நடிகர்களிடம் காண முடியாத, நுட்பமான அதே சமயம் அழுத்தமான பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் ஆண்டனியால் முடியும். அண்ணாதுரை படத்துக்கு அவரின் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் சிறப்பாக இருந்தது. நடிகராக, இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு எடிட்டராகவும் தன் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்த ஒத்துழைப்பால் படம் சிறப்பாக வந்திருக்கிறது. அண்ணாதுரை தலைப்புக்கேற்ற வகையில் ஒரு பவர்ஃபுல் படமாக இருக்கும். வாழ்நாளில் மறக்க முடியாத நவம்பர் 30 ரிலீஸுக்கு காத்திருக்கிறேன்” என்றார் அறிமுக இயக்குனர் சீனிவாசன்.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக டயானா சம்பிகா, மஹிமா மற்றும் ராதாரவி,காளி வெங்கட், நளினிகாந்த், ஜீவல் மேரி, ரிந்து ரவி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். தில்ராஜ் ஒளிப்பதிவில், ஆனந்த மணி கலை இயக்கத்தில், ராஜசேகர் சண்டைப்பயிற்சியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு அருண் பாரதி பாடல்கள் எழுதியுள்ளார், கவிதா, சாரங்கன் ஆடை வடிவமைப்பை செய்திருக்கிறார்கள்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]