விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு- கேள்வியெழுப்பியுள்ள எஸ் ஏ சந்திரசேகர்?

நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த பத்தாண்டுகளாகவே விஜய்யின் அரசியல் வருகை குறித்து செய்திகள் வந்துகொண்டிருந்தன. ரசிகர்கள் கூட விஜய், ரஜினி மாதிரி வரேன் வரேன் என்று இழுத்தடிப்பாரா அல்லது விஜயகாந்த் போல அரசியலுக்கு வந்து விடுவாரா எனக் குழப்பத்தில் இருந்தனர்.

விஜய்யும் கொஞ்சம் கொஞ்சமாக காய்களை நகர்த்தி வந்தார். தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கம் எனப் பெயர் மாற்றி புதுக்கொடியை அறிமுகப்படுத்தினார். ஆஙகாங்கே விஜய்யும் அவரது தந்தை சந்திரசேகரும் அரசியல் சம்மந்தமாக பூடகமாகப் பேசி வந்தனர்.

இதனால் எரிச்சலுற்ற ஆளும்கட்சிகள் விஜய்க்கு சில ரூபங்களில் தொந்தரவு கொடுத்து வந்தனர். விஜய்யின் காவலன் படத்திற்கு திமுக அரசும் தலைவா படத்திற்கு அதிமுக அரசும் ரிலீஸின் போது பிரச்சனைகள் கொடுத்தன. அவ்வப்போது விஜய்யும் மாற்றி மாற்றி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வந்தார்.

இதற்கிடையில் ரஜினியும் ஒரு வழியாக அரசியல் வருகையை உறுதி செய்துவிட எதிர்பாராத திருப்பமாக கமல் தனது கட்சிப் பெயரைக் கூட அறிவித்து களத்தில் இறங்கி வேலை செய்துகொண்டு வருகிறார். கலைஞர் மற்றும் ஜெயலலிதா எனும் இரு பெறும் அரசியல் தலைவர்களின் மரணம் தமிழக அரசியலில் வெற்றிடத்தை உருவாகியுள்ளது.

இதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கு விஜய் சமீபத்திய சர்கார் ஆடியோ வெளியீட்டு மேடையில் அரசியல் சர்ச்சையைக் கிளப்பினார். இதைத் தொடர்ந்து சற்றுக் காலமாக பேசப்படாதிருந்த விஜய்யின் அரசியல் வருகை பேச்சுகள் தற்போது மீண்டும் எழத் தொடங்கியுள்ளன. ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் தற்போது விஜய்யின் அரசியல் வருகைப் பேச்சு விவாதமாகி வருகிறது.

இந்நிலையில் இந்த விவாதங்களை மேலும் ஊக்குவிக்கும் வித்மாக விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இன்று ஒரு கேள்விஅயை எழுப்பியுள்ளார். பாபநாசத்தில் இன்று செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு என அவர் பத்திரிக்கையாளர்களிடம் எதிர் கேள்வி ஒன்றைக் கேட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]