விஜய்யின் மெர்சலை கண்டு ‘மெர்சல்’ ஆகாத படங்கள்

mersal

‘தெறி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து, தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள படம்தான் ‘மெர்சல்’. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா 2௦ ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.

கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘ஹரஹர மகாதேவகி’ என்ற படமும், அர்ஜுன் இயக்கத்தில் அவரது மகள் நடித்துள்ள ‘சொல்லிவிடவா’ என்ற படமும் தீபாவளி ரேஸில் குதித்துள்ளது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

‘மெர்சல்’ தீபாவளிக்கு வெளியாகிறது என்பதால் அதனுடன் போட்டிப் போட எந்தப் படமும் தயாராக இல்லை என்ற நிலை சில நாட்கள் முன்புவரை இருந்தது. இதற்கு முன் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ மெர்சலுடன் மோதும் என்றிருந்தது. ஆனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அதிகமிருப்பதால் அப்படம் நவம்பருக்கு தள்ளிப்போனது.