விஜய்யின் மகன் சஞ்சய் நடித்துள்ள குறும்படத்தின் வீடியோ இணையத்தில் வைரல்- வீடியோ உள்ளே

பிரபல நடிகரான விஜய்யின் மகன் சஞ்சய் நடித்துள்ள குறும்படத்தின் சிறு விடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து கொடி கட்டி பறப்பவர் விஜய். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சர்கார்’ படத்தில் நடித்துள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகவிருக்கிறது. சர்கார் கொண்டாட்டத்தின் தொடக்கமாக நேற்று மாலை 6 மணி அளவில் சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் உள்ளனர். இத்துடன் மேலும் சிறப்பான செய்தி வெளியாகியுள்ளது. விஜய்யின் முதல் மகனான சஞ்சய் குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்திருக்கும் சஞ்சய், தற்போது வெளிநாட்டில் பிலிம் மேக்கிங் படித்து வருகிறார். இந்த குறும்படத்தை இவர் தான் இயக்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றன.

இந்த குறும்படத்திற்கு ‘ஜங்ஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதிலிருந்து 51 நொடி காட்சி மட்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவினை ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டு வருகின்றனர். குறும்படத்தின் முழு வெளியீட்டிற்காக ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

நேற்றைய முன்தினம் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள ‘வர்மா’ பட டீசர் வெளியாகி பரவலாக பேசப்பட்டது. இதையடுத்து அடுத்த நட்சத்திரத்தின் குறும்பட விடியோ வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் ஓபனிங் சாங்கில் விஜய் உடன் சஞ்சய் அதிரடியாக ஆடி அசத்தியிருப்பார். அதேபோல் விஜய் மகள் திவ்ய சாஷா ‘தெறி’ படத்தின் கடைசி காட்சியில் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]