விஜய்யின் ‘சிம்டாங்காரன்’ பாடலின் அர்த்தம் இது தானா?

விஜய்யின் ‘சிம்டாங்காரன்’ பாடலின் அர்த்தம் இது தானா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘சர்கார்’

இப்படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர்.

காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘சிம்டாங்காரன்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, பல சாதனைகளையும் படைத்து வருகின்றது.

இந்நிலையில், ‘சிம்டாங்காரன்’ பாடல் குறித்து பாடலாசிரியர் விவேக் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்… – Chennai Tamil கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன் Attractive Young Man – Charismatic / Fearless / Audacious கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் .. நம்  என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வருகிற அக்டோபர் 2-ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]