விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் தலைப்பு என்ன?

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின்  தலைப்பு என்ன?

விஜய்சேதுபதி நடித்த ‘புரியாத புதிரி’ பொங்கல் திருநாள் விருந்தாக ஜனவரி 13ஆம் திகதி  வெளிவரவுள்ளது. இந்நிலையில் ‘ரேணிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் முக்கிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு ‘கருப்பன்’ என்கின்ற தலைப்பு  வைக்கப்பட்டுள்ளதாகவும், ‘றெக்க” படத்திற்கு பின்னர் விஜய்சேதுபதியுடன் மீண்டும் லட்சுமி மேனன் ஜோடி சேர்வதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.

மேலும் இந்த படத்தின் நெகட்டிவ் கெரக்டரில் நடிக்க பபிசிம்ஹா ஒப்பந்தமாகியுள்ளார். விஜய்சேதுபதி-பபிசிம்ஹா இணையும் மற்றொரு படம் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.