கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கும் படம்  ஸ்கெட்ச் “

மிக பிரமாண்டமான முறையில் தயாராகும் இந்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார்.

விஜய்சந்தர் இயக்குகிறார்

மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவிகிஷன், விஷ்வாந்த், மாலி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.

கலை – மாய பாண்டி

இசை – எஸ்.எஸ்.தமன்

ஒளிப்பதிவு – சுகுமார்

எடிட்டிங் – ரூபன்

நடனம் – ஷோபி, பிருந்தா

ஸ்டன்ட் – ரவிவர்மன்

பாடல்கள் – கபிலன், விவேக், ரோகேஷ், இயக்குனர் விஜய்சந்தர்

தயாரிப்பு நிர்வாகம் – ராமச்சந்திரன்

தயாரிப்பு – மூவிங் பிரேம்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜய்சந்தர் இயக்குகிறார்.

இந்த படத்திற்காக விஜய்சந்தர் எழுதிய

“ கனவே கனவே

புது கனவே

விழிக்கும் போதும்

வரும் கனவே “ என்ற பாடலை நடிகர் விக்ரம் பாட தமன் இசையில் பதிவு செய்யப்பட்டது.

விஜய்சந்தர் இயக்குகிறார்

படத்திற்காக சென்னையில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டது. முப்பது நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விஜய்சந்தர் இயக்குகிறார்

வட சென்னையை பிண்ணனியாகக் கொண்டு உருவாகும் இந்த படம் புது மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தும். வட சென்னையை பற்றி ஏற்கனவே சொன்ன படங்கள் எல்லாம் அவர்கள் படிப்பறிவு இல்லாத பாமரர்கள், ஏழைகள் என்று தான் கூறி உள்ளன. வட சென்னையில் படித்த டாக்டர்கள் , வக்கீல்கள் என்று உயர்மட்ட மக்களும் இருக்கிறார்கள் என்கிற ஸ்டைலிஷ் ஆன படமாக ஸ்கெட்ச் உருவாகி வருகிறது. பரபரப்பான ஆக்ஷன் படமாக ஸ்கெட்ச் உருவாகுகிறது என்றார் இயக்குனர் விஜய்சந்தர்.

விஜய்சந்தர் இயக்குகிறார்

விஜய்சந்தர் இயக்குகிறார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]