விஜய்க்கும் பிரபல நடிகை அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து 2014-ல் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் இரண்டு வருடங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
இருவரும் சுமூகமாக பேசி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் விவாகரத்து செய்து கொண்டார்கள். அமலாபால் தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
விஜய்க்கு 2-வது திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் விரும்பினர். அதற்கு இத்தனை நாட்களாக மறுத்து வந்த டைரக்டர் விஜய் இப்போது சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.
மணப்பெண்ணை தேர்வு செய்யும் படலம் தீவிரமாக நடக்கிறது. விஜய்க்கு விரைவில் 2-வது திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்பாக அவர் கைவசம் உள்ள 2 படங்களையும் வேகமாக முடிக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]