விஜய்க்கு ஜோடியாகும் கியாரா அத்வானி

நடிகர் விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே பைரவா படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

முருகதாஸ் இயக்கும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பாடல் காட்சி சூட்டிங் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் அட்லீ உடன் இணையவுள்ள விஜய் 63 படத்தில் ஹிந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இவர் எம்.எஸ்.தோனி படத்திலும், மகேஷ்பாபுவின் பாரத் அனே நேனு படத்திலும் நடித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]