விஜயின் மனைவி சங்கீதா இப்படிப்பட்டவரா?

இளைய தளபதி விஜய், ரசிகையாக இருந்த சங்கீதாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

பொதுவாக பிள்ளைகள் தான் தங்கள் காதலை, பெற்றோரிடம் தெரிவித்து, திருமணத்திற்கு சம்மதம் கேட்பார்கள்.ஆனால், விஜயின் காதல் கதையில் இதற்கு நேர் மாறாக. பெற்றோர்கள் தான் இவர்களது காதலை திருமணத்திற்கு எடுத்து சென்றனர்.

விஜய்யின் மனைவி சங்கீதா அவர்கள் தங்கள் காதல் குறித்து ஒருமுறை பகிர்ந்துகொண்டதாவது,பூவே உனக்காக’ படத்தைப் பார்த்து விஜய்யோட தீவிர ரசிகை ஆனேன். அவரைப் பார்க்கிறதுக்காகவே லண்டனில் இருந்து கிளம்பி வந்தேன்.

ரசிகைனு அறிமுகமாகி, நண்பர்களாகி, அப்புறம் காதலர்களானோம். அந்தச் சமயத்தில் விஜய் ‘காலமெல்லாம் காத்திருப்பேன் ‘படத்தின் படப்பிடிப்பில் பிஸியா இருந்தார்…

ஒருமுறை அவருடைய வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்திருந்தார். விஜய்யோட அம்மா, அப்பா எல்லாருமே எங்கிட்ட நல்லா பழகினாங்க.

முதல் சந்திப்பிலேயே, எனக்கும் விஜய்க்கும் ஒருவரையொருவர் பிடித்துவிட்டது. அவரை பார்த்துவிட்டு லண்டன் சென்ற பின்னர், மீண்டும் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

விஜய்யைப் பார்க்க இரண்டாவது முறை அவரோட வீட்டுக்குப் போனப்போ, அவரோட அப்பா என்னிடம், விஜய்யும் நீயும் திருமணம் செய்துகொள்ளுங்கள் என கூறியது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

இதன்பின்னர், அனைவரின் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்துகொண்டோம் என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]