முகப்பு Cinema விஜயின் சாதனையை அசால்டாக முறியடித்த அஜித்தின் விஸ்வாசம்

விஜயின் சாதனையை அசால்டாக முறியடித்த அஜித்தின் விஸ்வாசம்

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி விஜயின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

இயக்குநர் சிவாவுடன் நடிகர் அஜித்குமார் நான்காவது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’.அஜித்துடன் முதன்முறையாக இந்த படம் மூலம் டி.இமான் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.

இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், விவேக், கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட்டுக்கு ஏற்ப பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று அதிகாலை வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.

ஆனாலும் ஒரு சிலர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 23,000 க்கும் அதிகமானோர் ரீ-டுவிட் செய்துள்ளனர்.

இதன் மூலம் விஜயின் ‘தெறி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் செய்த சாதனையை 10 மணி நேரத்தில் முறியடித்துள்ளது அஜித்தின் ‘விஸ்வாசம்’ .

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com