விஜயதாஸ-ராஜபக்ஷ அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார்

விஜயதாஸ-ராஜபக்ஷ  அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார்.

 விஜயதாஸ ராஜபக்ஷ
wijayadhasa rajapaksa
நீதி மற்றும்  புத்தசாசன அமைச்சர் பதவிகளிலிருந்து  விஜயதாஸ ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

விஜயதாஸ ராஜபக்ஷ
maithripala sirisena
விஜயதாஸ ராஜபக்ஷவை அனைத்து அமைச்சுப் பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கோரியிருந்தது.
இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்று கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதி  அறிவித்துள்ளார்.
 விஜயதாஸ ராஜபக்ஷ, அமைச்சரவை ஒழுங்குகளை மீறும் வகையில் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்தார் எனவும், முன்னாள் ஆட்சியாளர்கள் (மஹிந்த அரசு) மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் மென்தன்மையைப் பேணினார் எனவும் அவர் மீது ஐ.தே.கவால்   குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]