விஜயகலா மகேஸ்வரன் தான் தன்னை காப்பாற்றினார் சுவிஸ்குமார் சாட்சியம்

விஜயகலா மகேஸ்வரன் தான் தன்னை காப்பாற்றினார் சுவிஸ்குமார் சாட்சியம். பொதுமக்களின் தாக்குதலிலிருந்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தான் தன்னை காப்பாற்றியதாக வித்தியா படுகொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான சுவிஸ்குமார் சாட்சியம் வழங்கியுள்ளார்.

அவா் தனது சாட்சியத்தில் தெரிவித்ததாவது,

எனது தம்பியை ஊா்காவற்றுறை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளமை குறித்து முறைப்பாடு செய்ய யாழ்ப்பாணம் புறப்பட்ட போது வேலணையில் என்னை வழி மறித்த மக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தார்கள்.

அப்போது அங்கு வந்த விஜயகலா மேடம் என்னை சசியின் அண்ணாவா என்று கேட்டா?. நான் ஓம் என்று சொன்னவுடன் மக்களைத் தாக்க வேண்டாம் என்றும், என்னை அவிழ்த்து விடுமாறும் மக்களிடம் கூறினார். அதனால் மக்கள் என்னை அவிழ்த்து விட்டார்கள்.

எனது குடும்பத்தினா் அந்த இடத்துக்கு வரும் வரை 2 மணி நேரமாக விஜயகலா மேடம் என்னுடனேயே இருந்தார். அப்போது இரவு 12 மணியின் பின்னா் எனது மனைவியும் எனது அம்மாவும் அந்த இடத்துக்கு வந்து என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்”- என்று அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

வித்தியா படுகொலை வழக்கின் எதிரி தரப்பு சாட்சியங்கள் யாழ். மேல் நீதிமன்ற தீா்ப்பாயம் முன்னிலையில் நடைபெறுகின்றன. இந்த வழக்கின் 9 ஆவது எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் (சுவிஸ்குமார்) தற்போது சாட்சியம் அளித்தார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]