விஜயகலா மகேஸ்வரன் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்

விஜயகலா

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற அரச நிகழவில், தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்க வேண்டும் என, விஜயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டதுடன், நாடாளுமன்றத்திலும் இது குறித்து சூடான நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பு நேற்று இரவு அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதற்கு விஜயகலா மகேஸ்வரன் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், விஜயகலா மகேஸ்வரன் தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]