விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக முறைப்பாடு?

விஜயகலாவின்

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள ராவய அமைப்பு இந்த முறைப்பாட்டை இன்றைய தினம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு கிழக்கில் விடுதலைப்புலிகளின் கை ஓங்க வேண்டும் என, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]