விஜயகலா மகேஸ்வரனின் உரையின் போது கைதட்டி ஆரவாரம் செய்த உத்தியோகத்தர்களுக்கு ஆப்பு

விஜயகலா மகேஸ்வரனின்

விஜயகலா மகேஸ்வரனின் உரையின் போது, கைதட்டி ஆரவாரம் செய்த அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக விசாரணை முன்னெடுக்குமாறு அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்டிருந்த நிகழ்வின் போது, அரச ஊழியர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும்இ அவர்கள் மீது விசாரணை நடாத்தி அறிக்கை சமர்பிக்கும்படி யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன்இ யாழ்.மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலர் களுக்கும் நேற்று முன்தினம் கடிதம் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மக்கள் சேவை 8வது தேசிய நிகழ்ச்சி திட்டம் யாழ்.மாவட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உள்நாட்டலுவ ல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப் பன ஆகியோர் மற்றும் முதலமைச்சர்இ நாடாளுமன்ற உறுப்பினர்கள்இ அமைச்சர்கள்இ மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் பெருமளவான அரச ஊழியர்களும் நிகழ்வி ல் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வ ரன் உரையாற்றுகையில் தமிழீழ விடுதலை புலிகளை மீள உருவாக்கவேண்டும். என கூறிய போது அரச ஊழியர்கள் மகிழ்ச்சியில் பலத்த கூச்சலிட்டு கரகோஷங்களையும் எழுப்பியிருந்தார்கள்.

இதேபோல் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் உரையாற்ற மேடைக்கு n சல்லும்போதும் அரச ஊழியர்கள் கரகோஷங்களை எழுப்பியதுடன் கூச்சலிட்டனர். இந்நிலை யிலேயே மேற்படி கடிதம் மாவட்ட செயலரினால் பிரதேச செயலர்களுக்கு அனுப்பிவைக்கப்ப ட்டிருக்கின்றது. அந்த கடிதத்தில் அரச அதிபர் குறிப்பிட்டிருப்பதாவதுஇ நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அரச ஊழியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உரையாற் றும்போது உரக்க சத்தமிட்டும்இ விசில் அடித்தும் பண்பாடற்ற வகையில் அநாகரிகமாக நடந் து கொண்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்கள் கலந்து கொண்டிருந்த ஒரு நிகழ்வில் அரச ஊழியர்கள் இவ்வாறு நடந்தமையானது வேதனைக்குரியதாகும். எனவே இந்த விடயம் தொடர்பாக முறையான விசாரணைக ளை நடாத்தி அறிக்கை சமர்பிக்கும்படி அரச அதிபர் யாழ்.மாவட்டத்தில் உள்ள சகல பிரதே ச செயலர்களுக்கும் எழுத்துமூலம் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பாக யாழ்.மாவட்ட அர சாங்க அதிபர் என்.வேதநாயகனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அரச ஊழியர்களுக்காக ஒழுக்கம் உள்ளது. அது மீறப்படும்போது எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையே இதுவாகும் என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]