விஜயகலா குறித்து விசாரிக்க குழு நியமனம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சியின் உயர்பீடத்தால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் தலதா அத்துகோரள, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், கபீர் ஹாசிம் மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் உள்ளடங்கியதாக குறித்த விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]