விஜயகலாவுக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவு

இராஜினாமா செய்வதற்கு

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பணித்துள்ளார்.

இது குறித்து பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடு, குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதனையடுத்து, குறித்த முறைப்பாடு குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையில் முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்த கருத்து தொடர்பில் தெளிவுபடுத்த இன்றைய தினம் தம்மை சந்திக்குமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் சிறப்பு அறிவிப்பொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் உரையாற்றுகையில் அவர்இதனை கூறியுள்ளார்.

அத்துடன், நிலவும் சட்ட நிலைமையை கருத்திற்கொண்டு அவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]