விஜயகலாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் வடக்கு முதல்வரின் கருத்து- சிஐடியினர் விசாரணை

விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் உட்பட நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை முன்னெடுத்து வருகின்றார்கள்.

முதலமைச்சர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களிலும், ஊடகவியலாளர்களை பொலிஸ் நிலையத்திலும் வைத்து இந்த விசாரணைகள் இன்று (17) இடம்பெற்றன.

கடந்த 02 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பணி நிகழ்வில் கலந்துகொண்ட விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களின் பின்னர், விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கப்பட வேண்டுமென உரையாற்றியிருந்தார்.

உரையின் பின்னர் ஏற்பட்ட குழப்பங்களின் பின்னர், அந் நிகழ்வில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.,சரவணபவன் உட்பட யாழ்ப்பாணம் எஸ். எஸ்.பி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]