விசேட ரயில் சேவைகள் 25திகதி முதல் ஆரம்பம்

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் என்று இலங்கை ரயில்வே சேவைகள் பிரிவைச் சேர்ந்த மேலதிக பொது முகாமையாளர் கலாநிதி விஜய சமரசிங்க தெரிவித்தார்.

இந்த ரயில் சேவைகள் இம்மாதம் 25ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் இடம்பெறும்.

இதே போன்று அனுராதபுரத்தில் பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வருகை தரும் பக்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் ரயில்வே திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நோன்மதி தினத்தன்று மஹாவயில் இருந்து அனுராதபுரம் வரையிலும், அனுராதபுரத்திலிருந்து மஹாவ வரையிலும் விசேட ரயில் சேவை இடம்பெறும். நோன்மதி தினத்தன்று அதிகாலை 3.30 இற்கு விசேட ரயில் ஒன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து, அனுராதபுரம் வரையில் பயணிக்கும். இந்த ரயில் காலை ஒன்பது மணிக்கு அனுராதபுர ரயில் நிலையத்தை சென்றடையும். இதேபோன்று இதே தினங்களில் கொழும்பு கோட்டையில் இருந்து கனேவத்தை வரையிலும் கனேவத்தையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட ரயில் சேவை இடம்பெறும். விசேடமாக 28ம் 29ம் திகதிகளில் மஹாவயில் இருந்த அனுராதபுரம் வரையில் விசேட ரயில் சேவை இடம்பெறும் என்றும் இலங்கை ரயில்வே சேவைகள் பிரிவைச் சேர்ந்த மேலதிக பொது முகாமையாளர் கலாநிதி விஜய சமரசிங்க மேலும் தெரிவித்தார்.