விசேட தேடுதல் நடவடிக்கையில் 2,630 பேர் கைது

பொலிஸார் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 2,630 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணிமுதல் காலை 8 மணிவரை நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 270 பேர், மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 938 பேர் உள்ளிட்டவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]