விசேட சுற்றிவளைப்பில் 30 பேர் கைது

மேல் மற்றும் தென் மாகாணங்களில் கடந்த இரண்டு நாட்களாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

இதன்போது, ஆயுதங்கள் மற்றும் போதைபொருட்களுடன் 30 சந்தே நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, 5 கைக்குண்டுகள், டி -56 ரக துப்பாக்கிகள் இரண்டு, பிஸ்டல் மற்றும் ரிவோல்வர்கள் 5 என்பவை கைப்பற்றப்பட்டதுடன், துப்பாக்கி ரவைகளையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

அத்துடன், 56 கிராம் ஹெரோய்ன் மற்றும் 111 கிராம் போதைபொருள் வகையொன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]