விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அமைச்சரவை கூட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இன்று (வியாழக்கிழமை) நண்பகல் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்திலிருந்து அமைச்சரவை அமைச்சர்கள் அனைவருக்கும் தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த விசேட அமைச்சரவை சந்திப்பிற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஜனாதிபதி தலைமையில் வாராந்தம் நடைபெறும் அமைச்சரவை சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், மீண்டும் அமைச்சரவை கூடவுள்ளமை அரசியல் வட்டரங்களில் சிறிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]