விசுவாசம் திரைப்படம் நகைச்சுவை பட்டாளத்தோடு மிக விரைவில்

விசுவாசம் என்ற பெயருக்கு மிகவும் பொருந்த கூடிய விசுவாசமான நடிகர் என்றால் அது நம்ம தல அஜித்தான். சிவாவின் இயக்கத்தில் ஏற்கேனவே மூன்று படங்களில் நடித்து முடித்திருக்கும் அஜித் , நான்காவது முறையாகவும் சிவாவின் இயக்கத்தில் நடிக்க போகிறார்.விவேகம் படம் வர்த்தக ரீதியில் தோல்வியடைந்தாலும் இயக்குனர் சிவாவுடன் மீண்டும் இனைவது விசுவாசத்திற்காகதானாம்.

அஜித், சிவா
Ajith, Siva

படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்க்கு நடிகர்களை தெரிவு செய்யும் பணி தொடர்கிறது. இந்த படத்திற்க்கு நடிகை நயன்தாரா மற்றும் இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் யோகி பாபு, தம்பி ராமைய்யா , ரோபோ ஷங்கர் போன்றவர்களிடம் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

இந்த படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தருவதாக இருப்பதால் படம் காதல் மற்றும் குடும்ப பின்னனியில் அமைந்த கதையாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]