‘விசுவாசம்’ டீசர் நாளை? அட்டகாமசமான போஸ்டர் வெளியானது

'விசுவாசம்' டீசர்

அஜித் நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி அமைக்கிறார். படத்தின் டைட்டில் ‘விசுவாசம்’ என அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #Viswasam ட்ரெண்ட் ஆனது. பட டைட்டிலை தாண்டி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரசிகர்கள் பலரும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யார் எனத் தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், படத்தின் டீசருடன், இசையமைப்பாளர் யார் எனும் விபரமும் நாளை வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு போஸ்டர் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது நாளை இசையமைப்பாளர் யார் என்பதை டீசர் ஒன்றின் மூலமாக அறிவிக்க உள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. மேலும், யார் எனக் கண்டுபிடியுங்கள் என புதிர் வைத்துள்ளனர். ஆனால், இந்தத் தகவல் உண்மை தானா என்பது தெரியவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]