விசா இன்றி வெளிநாடு பயணிக்கலாம் என்ற கணக்கெடுப்பின்படி இலங்கைக்கு 93 வது இடம்

பலம் வாய்ந்த பாஸ்போர்ட் மற்றும் எந்த எந்த நாடுகளுக்கு பாஸ்போர்ட் இன்றி பயணிக்கலாம் என்ற உலகளாவிய கணக்கெடுப்பின்படி இலங்கைக்கு 93 வது இடம் . உலகளாவியரீதியில் பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலை Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வீசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்என்பதன் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டை கொண்ட நாடாக ஜப்பான்முன்னிலை பெற்றுள்ளது. இதைப் பயன்படுத்தி 189 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்றுவரலாம்.

இரண்டாம் இடத்தில் ஜேர்மனி மற்றும் சிங்கப்பூர் கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி 188 நாடுகளுக்குச் செல்லலாம்.

மூன்றாம் இடத்தில் பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், சுவீடன், தென்கொரியா உள்ளன. 187 நாடுகளுக்கு வீசா இன்றி பயணிக்கமுடியும்.

நான்காவதுபிரித்தானியா, நோர்வே, லக்சம்பேர்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து, போர்த்துகல், அமெரிக்கா உள்ளன.

இந்நாடுகளின் கடவுச்சீட்டை பயன்படுத்தி 186 நாடுகளுக்கு வீசா இன்றி பயணிக்கமுடியும்.

ஐந்தாவது இடத்தில் கனடா, பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து, சுவிட்சர்லாந்துஉள்ளன. 185 நாடுகளுக்கு பயணிக்கமுடியும்.

ஆறாவது இடத்தில் அவுஸ்திரேலியா மற்றும் கிரீஸ் கடவுச்சீட்டுகள் உள்ளன.
புதியதரவுக்கு அமைய 93 ஆவது இடத்தில் இலங்கை மற்றும் எத்தியோப்பியா நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டை பயன்படுத்தி வீசா இன்றி 42 நாடுகளுக்கு பயணிக்கமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]