விசாரணை அறிக்கை மூடி மறைக்கப்பட மாட்டாது – தயாசிறி

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு வேண்டுகோளுக்கு அமையவே ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிணை முறி விசாரணை அறிக்கை மூடி மறைக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று அவர் இதனைக் கூறியுள்ளார்.

திருட்டுக்கு எதிராகவே இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இந்த அரசாங்கத்தில் திருடவோ திருட்டுக்கு உதவவோ இடமளிக்க முடியாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“சுருக்குமுறையற்ற விசாரணை முடிவடைந்துள்ளது. அடுத்து சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படும். இதனை சட்டமா அதிபருக்கு கையளிக்கத் தேவையில்லை. நேரடியாகவே வழக்குத் தொடர முடியும்” என்றும் அவர் கூறினார்.

அத்துடன், “ஆணைக்குழு தலைவர் உச்ச நீதிமன்ற நீதியரசர் என்பதால் தெளிவாக தனது அறிக்கையில் முடிவு வழங்கியுள்ளார்.

மீள விசாரணை நடத்தத் தேவையில்லை. குற்றவாளிகளை தண்டிக்கும் நடவடிக்கையே அடுத்து எடுக்கப்படும்.” என்றும் அவர் மெலும் தெரிவித்தார்.